முகப்பு தொடர்பு கொள்ள
தமிழ்
  • KJV
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • हिन्दी
2 சாமுவேல்
  • ஆதியாகமம்
  • யாத்திராகமம்
  • லேவியராகமம்
  • எண்ணாகமம்
  • உபாகமம்
  • யோசுவா
  • நியாயாதிபதிகள்
  • ரூத்
  • 1 சாமுவேல்
  • 2 சாமுவேல்
  • 1 இராஜாக்கள்
  • 2 இராஜாக்கள்
  • 1 நாளாகமம்
  • 2 நாளாகமம்
  • எஸ்றா
  • நெகேமியா
  • எஸ்தர்
  • யோபு
  • சங்கீதம்
  • நீதிமொழிகள்
  • பிரசங்கி
  • உன்னதப்பாட்டு
  • ஏசாயா
  • எரேமியா
  • புலம்பல்
  • எசேக்கியேல்
  • தானியேல்
  • ஓசியா
  • யோவேல்
  • ஆமோஸ்
  • ஒபதியா
  • யோனா
  • மீகா
  • நாகூம்
  • ஆபகூக்
  • செப்பனியா
  • ஆகாய்
  • சகரியா
  • மல்கியா
  • மத்தேயு
  • மாற்கு
  • லூக்கா
  • யோவான்
  • அப்போஸ்தலருடைய நடபடிகள்
  • ரோமர்
  • 1 கொரிந்தியர்
  • 2 கொரிந்தியர்
  • கலாத்தியர்
  • எபேசியர்
  • பிலிப்பியர்
  • கொலோசெயர்
  • 1 தெசலோனிக்கேயர்
  • 2 தெசலோனிக்கேயர்
  • 1 தீமோத்தேயு
  • 2 தீமோத்தேயு
  • தீத்து
  • பிலேமோன்
  • எபிரெயர்
  • யாக்கோபு
  • 1 பேதுரு
  • 2 பேதுரு
  • 1 யோவான்
  • 2 யோவான்
  • 3 யோவான்
  • யூதா
  • வெளிப்படுத்தின விசேஷம்
22
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
1 கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு:
2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.
3 தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக்கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே.
4 ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன்.
5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
7 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று.
8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது.
9 அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல்மூண்டது.
10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின் கீழ் காரிருள் இருந்தது.
11 கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார்.
12 ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார்.
13 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது.
14 கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தை தொனிக்கப்பண்ணினார்.
15 அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.
16 கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது.
17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார்.
18 என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார்.
19 என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.
20 என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.
21 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார்.
22 கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை.
23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல்,
24 அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னைவிலக்கிக் காத்துக்கொண்டேன்.
25 ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாகவும், தம்முடைய கண்களுக்குமுன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,
27 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.
28 சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.
29 கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர்.
30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒருமதிலைத் தாண்டுவேன்.
31 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அவனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார்.
32 கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்?
33 தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர்.
34 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.
35 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
36 உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும்.
37 என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர்.
38 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன்.
39 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.
40 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.
41 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர்.
42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை.
43 அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன்.
44 என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள்.
45 அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
46 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
47 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக.
48 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
49 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறார்.
50 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன்.
51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
‹ ›
© 2025 DailyManna.co.in. All rights reserved.